சனசமூக நிலையம் செயற்குழு 2009

தும்பளை மேற்கு சன சமூக நிலையத்தின் இன்றைய நிலை


2008ம் ஆண்டு தும்பளை மேற்கு சன சமூக நிலைய நிர்வாக சபையினரின் முயற்சியாலும் இவ்வ+ர் நலன் விரும்பிகளின் முயற்சியாலும் ஒரு காணி திருமதி பவானி தர்மலிங்கம் அவர்கள் மனம் உவந்து நிலையத்திற்கென அன்பளிப்பாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து 2008ம ஆண்டின் இறுதியில் 2009ம் ஆண்டிற்கான நிர்வாக சபை தெரிவுப் பொதுக் கூட்டம் இடம் பெற்றது.
அந்த வகையில்
  • தலைவராக திரு கு பஞ்சாட்சரம் அவர்களையும்,
  • உப தலைவராக திரு. ச.சிறீகாந் அவர்களையும்,
  • செயலாளராக திரு. இ.நிரஞ்சன் அவர்களையும்,
  • உப செயலாளராக திரு. சி.சங்கநாதன் அவர்களையும்,
  • பொருளாளராக திரு. மு.காண்டீபன் அவர்களையும்,

மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக

  • திரு. இ.பாலேந்திரா அவர்களையும்,
  • திரு. புலேந்திரன் அவர்களையும்,
  • திரு. நா.சிவராசா அவர்களையும்,
  • திரு. சு.ஜனார்த்தனன் அவர்களையும்,
  • செல்வி. ஏ.வரலட்சுமி அவர்களையும்,
  • திருமதி. சௌ.ரேணுகா அவர்களையும்,
மற்றும் கணக்காய்வாளராக திரு. இ. தயாபரன் அவர்களையும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.
2009ம் ஆண்டுற்கான நிர்வாகம் திரு.கு.பஞ்சாட்சரம் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றவுடன்இ ஊர் மக்களின் அனுசரனையுடன் நலன் விரும்பிகளின் துணையுடனும் பல நடவடிக்கைகள் நிலையத்தின் வள்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வகையிலே நிலைய அங்கத்தவர்களிடம் சந்தாப்பணம் பெறப்பட்டு அதற்கான ஆவணங்களும் மற்றும் பதிவேடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அரசாங்கத்தால் நகராட்சி மன்றம் முலம் வழங்கப்படும் மானியத்தொகையின் நிலுவைகள் மற்றும் இவ்வாண்டிற்கான மானியமும் பெறப்பட்டமை. நிலையத்தின் வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டமை. நிலையக்காணியில் ஊர்மக்களின் ஆலோசனைப்படி ஒரு குழாய்க் கிணறு இடிக்கப்பட்டமை.இது இவ்வ+ர் இளைஞர்களால் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் காணி தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை. மற்றும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நிலையத்திற்கொன ஒரு கட்டடம் அமைப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பல கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. மற்றும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறான திட்டங்கள் அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படுவது கால தாமதமாவதாலும் மேலும் நிதி தேவைப்படுவதாலும் இவ்வூர் வாசிகளான புலம் பெயர்ந்த தமிழர்களிடமும், வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றோரிடமும் மற்றும் இவ்வூர் வாசிகளிடமும் (வவுனியா, கொழும்பு) நிதி கோரி பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் சில நலன்விரும்பிகள் நிலையத்திற்கென பணம் அனுப்பியும் இருக்கின்றனர். இன்னும் பலர் இவ்வாறு பணம் அனுப்புவர் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு இது போன்ற பல முயற்சிகள் 2009ம் ஆண்டு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்ந்தும் இனி வருகின்ற ஆண்டுகளின் நிர்வாகத்தினராலும், நலன் விரும்பிகளினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலைய கட்டடம் ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியாக தெரிவிக்கின்றோம். மற்றும் மாதத்திற்கு ஒரு தடவை நிர்வாக சபைக்கூட்டமும் நான்கு மாதங்களிற்கு ஒருமுறை பொதுக்கூட்டமும் தவறாது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்டடம் அமைப்பதற்கான நிதியை ஊர்மக்கள் அனைவரிடமும் இருந்தும் குறைந்தது 2000ருபா என்ற வகையில் சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கென ஜந்து பேர் கொண்ட விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தினர்
து. மே. சனசமுக நிலையம்.